பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"சொந்தமாக ஆயுதம் தயாரிக்கும் நாடு தன் விதியை தானே நிர்ணயித்துக் கொள்ளும்கொள்ளும்" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAY 2026 7:15PM by PIB Chennai

"சொந்தமாக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடே தன் விதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும்" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில், 'நைபி குழுமத்தின்' புதிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி வளாகத்தை, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் இணைந்து அவர் இன்று திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் ஏவுகணைகள், பீரங்கி அமைப்புகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இவ்விழாவில், இந்தியாவின் முதலாவது 300 கிலோமீட்டர் தூரம் பாயும் 'சூர்யாஸ்த்ரா' ராக்கெட் ஏவுதள அமைப்பு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், உள்நாட்டு வெடிபொருள் தயாரிப்பு தொழில்நுட்ப ஆலைகளும் திறக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "எதிர்காலப் போர்களின் முடிவை ராணுவத்தின் அளவு தீர்மானிக்காது; தொழில்நுட்பமே தீர்மானிக்கும் என்பதை உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய மோதல்கள் உணர்த்துகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத் துறையைத் தனியார் துறைக்குத் திறந்துவிட்டதன் மூலம் இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது" என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264604&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264730) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu