வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அடுத்த தலைமுறை தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ், இந்தியா-ஐரோப்பா வர்த்தக ஒத்துழைப்பு குறித்த மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 6:17PM by PIB Chennai
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து, அடுத்த தலைமுறை வர்த்தக ஒப்பந்தங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் இந்தியா - ஐரோப்பா நாடுகளிடையே வர்த்தக ஒத்துஉழைப்பை வலுப்படுத்துவது குறித்த மாநாடு இம்மாதம் 19 மே 2026 அன்று புது தில்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், வர்த்தக வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ், இந்தியா - ஐரோப்பா இடையே வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனந்த் ஸ்வரூப் அதிகரித்து வரும் ஐரோப்பாவுடனான இந்தியாவின் வர்த்தக ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வர்த்தக வசதி குழுவின் தலைவர் மற்றும் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். ஐரோப்பிய சந்தைகளில் உள்ள வரிவிதிப்பு தொடர்பான தடைகளைத் திறம்படக் கையாள்வதற்கு, தரநிலைகள் உள்கட்டமைப்பு, சோதனை மற்றும் சான்றளிப்புத் திறன்கள், டிஜிட்டல் இணக்கக் கருவிகள் மற்றும் நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஹரிஷ் அஹுஜா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.inPressReleasePage.aspxPRID=2264258®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264687)
வருகையாளர் எண்ணிக்கை : 5