வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாக இணைவதற்கான நெறிமுறையில் இந்தியா - எத்தியோப்பியா நாடுகள் கையெழுத்திட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 9:36PM by PIB Chennai
உலக வர்த்தக அமைப்பில் எத்தியோப்பியா இணைவது தொடர்பான இருதரப்பு இணைப்பு நெறிமுறையில், இந்தியா - எத்தியோப்பியா நாடுகள் மே 22, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா சார்பில், உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் தூதரும், நிரந்தரப் பிரதிநிதியுமான டாக்டர் செந்தில் பாண்டியன், எத்தியோப்பியாவின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான எத்தியோப்பியாவின் தூதரும், நிரந்தரப் பிரதிநிதியுமான செகாப் கெபெபெவ் டகா ஆகியோர் இந்த நெறிமுறையில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து, கைழுத்திடப்பட்ட நெறிமுறை ஆவணங்கள் உலக வர்த்தக அமைப்பின் செயலகத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன.
வளர்ந்து வரும் நாடுகள், மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் இணைவதை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஏனெனில், பல்வேறு வர்த்தக அமைப்பு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் அந்நாடுகள் முழுமையாக ஒருங்கிணைவது, சமச்சீரான உலகப் பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு இன்றியமையாதது என்று இந்தியா அங்கீகரிக்கிறது
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264383®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264680)
வருகையாளர் எண்ணிக்கை : 3