சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளுடன், 100 கோடி சுகாதாரப் பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 6:03PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார ஆணையத்தால் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், 100 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பதிவுகளை, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளுடன் வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்தச் சாதனை, நாட்டில் ஒருங்கிணைந்த, மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் சுகாதாரச் சூழலமைப்பை உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
இது அரசின் சுகாதாரத் திட்டங்கள், மாநில சுகாதாரத் தளங்கள், பொது டிஜிட்டல் அமைப்புகள், தனியார் சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே ஆயுஷ்மான் டிஜிட்டல் இயக்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளது. தற்போது, 450-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் சுகாதாரத் தொழில்நுட்பத் தீர்வுகள் இந்த இயக்கத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சுகாதார வசதிகள் முழுவதும், சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதையும், தடையின்றிப் பரிமாறிக்கொள்வதையும் இது துரிதப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264241®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264546)
வருகையாளர் எண்ணிக்கை : 7