கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி கனரக இயந்திர தென்னாப்பிரிக்காவுக்கான ஏற்றுமதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 7:37PM by PIB Chennai
மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகு அமைச்சர் திரு.ஹெச்.டி. குமாரசாமி, களமசேரியில் உள்ள ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) தொழிற்சாலைக்கு நேரில் சென்று அதன் உற்பத்தித் திறன்களை ஆய்வு செய்தார். அப்போது, தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள அதிநவீன 'என்ஹெச் சீரிஸ்' இயந்திரத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது இந்தியப் பொதுத்துறை பொறியியல் திறனுக்கான உலகளாவிய அங்கீகாரமாகும்.
தொடர்ந்து, இந்திய கடற்படைக்கான ஒலியளவி கருவிகள், சிஎன்சி எந்திரங்கள் தயாரிப்பை பார்வையிட்ட அமைச்சர், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ரயில்வே துறைகளில் ஹெச்எம்டியின் பங்களிப்பைப் பாராட்டினார். பின்னர் எஃப்சிஆர்ஐ, கருவியியல் லிமிடெட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் நலன் மற்றும் தொழிற்சாலையின் நவீனமயமாக்கல் குறித்து முழு ஆதரவை உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264310®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264529)
வருகையாளர் எண்ணிக்கை : 7