தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், தொலைத் தொடர்புத் துறை, ஒத்துழைப்பிற்கான பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தை ஏற்பாடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 7:31PM by PIB Chennai

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், தொலைத் தொடர்புத் துறை, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களில் (ஐசிடி) ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பிரிக்ஸ் பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தை, 2026 மே 21 அன்று இணையவழியில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வழிநடத்தியது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், எதிர்காலத் தொலைத் தொடர்பு கட்டமைப்புகள்  புத்தாக்கச் சூழலமைப்புகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு  மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான கூட்டு உறுதிப்பாட்டை இக்கூட்டம் பிரதிபலித்தது.

ஐசிடி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் மூத்த அதிகாரிகளையும் இக்கூட்டம் ஒன்றிணைத்தது. இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் முதன்மை கருப்பொருளான — “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பை உருவாக்குதல்” — என்பதன் கீழும், ஐசிடி துறைக்கான பிரத்யேக கருப்பொருளான — “மீள்திறன் மிக்க எதிர்காலத்திற்காகப் புத்தாக்கம் செய்தல், ஒத்துழைத்தல் மற்றும் உருமாற்றம் அடைதல் ” — என்பதன் கீழும் நடைபெற்ற இக்கூட்டத்தில், டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், புத்தாக்கம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான கூட்டு அணுகுமுறைகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264308&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264528) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Gujarati