பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடுத்த தலைமுறை ரோந்துக் கப்பலான சங்கமித்ரா கடற்படையில் அறிமுகம்

प्रविष्टि तिथि: 20 MAY 2026 9:30PM by PIB Chennai

கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில், அடுத்த தலைமுறை ரோந்துக் கப்பலான சங்கமித்ரா, 2026 மே 20 அன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.

கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சாயன் முன்னிலையில், திருமதி சரிதா வத்சாயன் இக்கப்பலைத் திறந்து வைத்தார். முழு கடற்படை மரியாதையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா  மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு 11 ரோந்துக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. பேரரசர் அசோகரின் மகளான சங்கமித்ராவின் நினைவாக இக்கப்பலுக்கு 'சங்கமித்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இக்கப்பல் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகளில் இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263508&reg=3&lang=1  

***

SS/VK/SE


(रिलीज़ आईडी: 2264465) आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी