மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய ஒற்றுமையின் தூதர்களாக செயல்படுங்கள் யுவ சங்கம் பிரதிநிதிகளுடன் ஆந்திரப் பிரதேச ஆளுநர் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 3:35PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் "யுவ சங்கம்" (ஆறாம் கட்டம்) திட்டத்தின் கீழ், திருப்பதி ஐஐடி-க்கு கல்வி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்காக வந்துள்ள மகாராஷ்டிரா மாநில இளைஞர் குழுவினருடன் ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு அப்துல் நசீர், மே 18, 2026 அன்று கலந்துரையாடினார். புனே ஐஐஎஸ்இஆர் கல்வி நிறுவனம் இக்குழுவை வழிநடத்துகிறது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சாரப் புரிதல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். இத்தகைய முன்னெடுப்புகள் நாட்டின் வளர்ச்சி சாதனைகளை இளைஞர்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவுவதுடன், உணர்வுப்பூர்வமான ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்களைத் தேசிய ஒற்றுமையின் தூதர்களாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையால் தொடங்கப்பட்ட யுவ சங்கம் ஆறாம் கட்டம், கல்வி, கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264104®=3&lang=1
***
SS/PD/EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264309)
வருகையாளர் எண்ணிக்கை : 12