உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ராஞ்சி விமான நிலையத்தில் பகவான் பிர்சா முண்டா சிலையை மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 9:08PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு புதிய திட்டங்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு முறைப்படி திறந்து வைத்தார். மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பகவான் பிர்சா முண்டாவின் சிலை, உதான் பயணிகள் சிற்றுண்டிச்சாலை, கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, நூலகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, பழங்குடியினப் பெருமையையும் நவீன வளர்ச்சியையும் இணைக்கும் விதமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 165-ஆக உயர்ந்துள்ளதாகக் கூறிய அவர், ராஞ்சி விமான நிலைய முனையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய விரிவான திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263470®=3&lang=1
***
SS/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264132)
வருகையாளர் எண்ணிக்கை : 13