சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேசப் புலி இனங்கள் கூட்டமைப்பின் முதலாவது உச்சிமாநாடு - இம்மாநாடு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பில் மாற்றம்

प्रविष्टि तिथि: 21 MAY 2026 10:38PM by PIB Chennai

சர்வதேசப் புலி இனங்கள் கூட்டமைபின் முதலாவது உச்சிமாநாடு, புது தில்லியில் 2026 ஜூன் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு  ஆப்பிரிக்க நாடுகள், புலிகளின் வாழ்விடங்களாகத் திகழ்வதுடன், அவற்றின் பாதுகாப்பு, சூழலியல் நிலைத்தன்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சார்ந்த உலகளவிலான முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சிமாநாட்டிற்கு இணையாக இந்த சர்வதேசப் புலி இனங்கள் கூட்டமைப்பின் உச்சிமாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சிமாநாட்டை வேறொரு தேதியில் நடத்துவது என ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடுகள் உட்பட புலிகள் வாழும் அனைத்து நாடுகளின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், முதலாவது சர்வதேச புலி இனங்கள் உச்சிமாநாட்டை வேறொரு தேதியில் நடத்துவது எனத் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டிற்கான புதிய தேதி, இதில் பங்கேற்கும் நாடுகள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி ஆகிய பகிரப்பட்ட நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா உறுதியான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2263958)

SS/SV/PD


(रिलीज़ आईडी: 2264031) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali