சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வாழ்வியல் இயக்கம் என்ற பிரச்சாரத்தின் கீழ், தேசிய விலங்கியல் பூங்கா கோடை விடுமுறைத் திட்டம் 2026-ஐத் தொடங்கியது
प्रविष्टि तिथि:
21 MAY 2026 8:32PM by PIB Chennai
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள -பகுதிகளில் உள்ள மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன், தனது கோடை விடுமுறைத் திட்டம் புதன்கிழமை அன்று தேசிய விலங்கியல் பூங்காவின் கல்வி மையத்தில் வெற்றிகரமாகத் தொடங்கியது.
வாழ்வியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு, “இயற்கையால் உத்வேகம்,பருவ நிலைக்காக, எதிர்காலத்திற்காக” என்ற உலக சுற்றுச்சூழல் தினக் கருப்பொருளுடன் இணைந்த இத்திட்டம், கலந்துரையாடல் வாயிலான கல்விச் செயல்பாடுகள் மூலம் பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை நடவடிக்கை, வனவிலங்கு பாதுகாப்பு, தூய்மை மற்றும் நீடித்த வாழ்வியல் முறை குறித்த இளம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட கூகுள் பதிவு இணைப்பு மூலம் மொத்தம் 854 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இவர்களில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 60 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் உறுதிப்படுத்தலுக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டனர். தொடக்க நாளில், தில்லி-என்சிஆர் முழுவதிலும் உள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 39 மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில், பங்கேற்பாளர்களுக்கு கோடைகால விடுமுறைத் திட்டம் 2026-ன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிமுக அமர்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தாவர உண்ணிகள் மற்றும் ஊனுண்ணிகளின் அடைப்பிடங்களை உள்ளடக்கிய வழிகாட்டியுடன் கூடிய உயிரியல் பூங்காப் பயணம் இடம்பெற்றது. மேலும், சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு, துறை சார்ந்த நிபுணர் டாக்டர் ஃபையாஸ் ஏ. உரையும் இடம் பெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263929®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2263952)
आगंतुक पटल : 40