வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சல பிரதேசத்தின் ஆர்கானிக் கிவி பழ உற்பத்தியை மேம்படுத்த ரூ.167 கோடியில் புதிய திட்டத்தை மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 7:25PM by PIB Chennai

மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, “அருணாச்சல கிவி: அருணாச்சல பிரதேசத்தின் தனித்துவ விற்பனைத்திறன்” என்ற புதிய திட்டத்தை புதுதில்லியில்   மே 20 2026 அன்று தொடங்கி வைத்தார். அருணாச்சல பிரதேச முதல்வர் திரு.  பெமா காண்டு முன்னிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சுமார் ரூ.167 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், அம்மாநில கிவி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், உலகளாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கிவி பழ உற்பத்தியில் அருணாச்சல பிரதேசம் 50 சதவீதத்திற்கும் மேல் பங்களித்த போதிலும், விவசாயிகளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. இதனைத் தவிர்க்க, ஜிரோ பள்ளத்தாக்கு, திராங் உள்ளிட்ட 6 முக்கியப் பகுதிகளில் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் மற்றும் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், 2028-ஆம் நிதியாண்டிற்குள் அருணாச்சல பிரதேசத்தின் ஆர்கானிக் கிவி பழங்களைச் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, நியூசிலாந்தின் கிவி பழ உற்பத்தி இல்லாத நவம்பர் - ஜனவரி மாதங்களில், அருணாச்சல கிவி பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவமான தயாரிப்புகளை உலகளவில் கொண்டு சேர்க்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263399&reg=3&lang=1

***

SS/EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2263924) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese