கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகனங்களுக்கான நிதி உதவி வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

प्रविष्टि तिथि: 20 MAY 2026 8:13PM by PIB Chennai

தனியார் துறையில் மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார லாரிகளின் பயன்பாட்டை வேகப்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவி வழிமுறைகள் குறித்து, மத்திய கனரக தொழில்துறை & எஃகு துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி தலைமையில் புதுதில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகள், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் போன்ற பல்வேறு போக்குவரத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், எரிபொருளைச் சேமிக்கவும் மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறும் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பின்படி இக்கூட்டம் நடத்தப்பட்டது. தனியார் துறையினர் மின்சார வாகனங்களை வாங்குவதில் உள்ள சவால்கள், கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் வட்டி மானியம் வழங்குவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இந்த முன்முயற்சி, வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு  இலக்கை அடையவும், தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263430&reg=3&lang=1

***

SS/VK/SE


(रिलीज़ आईडी: 2263896) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada