அரிய மரபணு சார்ந்த பரம்பரை நோய்களுக்கான மருத்துவ சிகிச்சையை நிர்வகிப்பதற்கான தனித்துவ முறைகள் திட்டத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார்.
உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், புதுதில்லியில் உள்ள பிருத்வி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியா படிப்படியாக ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது என்றும், அதில் சுகாதாரப் பராமரிப்பு, நோயறிதல், சிகிச்சை முறைகள் ஆகியவை மரபணு சார்ந்ததாகவும், துல்லியமானதாகவும், ஒவ்வொரு நோயாளியின் மரபணு சுயவிவரத்திற்கு ஏற்ப, மாறுபடும் தன்மை கொண்டது என்றும் கூறினார்.
பரம்பரை மற்றும் அரிய மரபணு பிரச்சனைகளைக் கண்டறிவது கடினமாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கக் கூடியதாக இருப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கான மருந்துகள் பற்றாக்குறை அல்லது மிக அதிகமான விலை கொண்டதாக உள்ளது என்றும், அவை பல்வேறு தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தன என்றும், அவர் கூறினார்.
எனவே, மரபணு சார்ந்த பாதிப்புக்களை கண்டறிதல் மற்றும் பராமரிப்பு மேலாண்மை சார்ந்த நடைமுறைகளை அனைத்துக் குடும்பங்களுக்கும் குறைந்த செலவில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த தேசிய வழிமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
இந்தியாவில் துல்லிய மருத்துவ சிகிச்சைக்கான எதிர்காலத்திற்கு ஒரு முக்கிய முன்முயற்சியாக மரபணு மற்றும் துல்லிய மருத்துவ சிகிச்சை முறைகள், சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் உள்ளது என்று எடுத்துரைத்த அமைச்சர், இந்த முன்முயற்சி, அடுத்த தலைமுறை மரபணு மற்றும் மரபணுத்தொகுதி அடிப்படையிலான மருத்துவப் பராமரிப்புக்காக நாட்டின் சுகாதாரச் சூழலமைப்பைக் கட்டமைக்க உதவிடும் என்றும் கூறினார்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263736®=3&lang=1
***
SS/SV/SE