நாட்டில் பெரு நிறுவனங்களின் நிர்வாகம், சுற்றுச்சூழல், சமூகம், மூலதனச் சந்தைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் நிறுவப்பட்ட தேசியப் பத்திரச் சந்தைகள் நிறுவனம்' மற்றும் மத்திய பெறுநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெறுநிறுவன விவகாரங்கள் நிறுவனம் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், சான்றிதழ் படிப்புகள், நிர்வாகக் கல்வித் தொகுப்புகள்ஈ பயிற்சித் திட்டங்களை வடிவமைத்து வழங்கவுள்ளது. இத்திட்டங்கள் செபி அதிகாரிகள் மற்றும் பிற ஒழுங்குமுறை மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மே 19, 2026 அன்று மும்பையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் திரு துஹின் பாண்டே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
செயல்திறன் சார்ந்த ஒரு நிறுவன நிர்வாகச் சூழலமைப்பை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இத்தகைய சூழலமைப்பு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கு உதவுவதுடன், நிலைத்தன்மை குறித்த நடைமுறைகளை வலுப்படுத்தவும், ஒழுங்குமுறைத் துறைகளில் சான்றுகள் சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், உதவிடும் என்று திரு துஹின் பாண்டே குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263645®=3&lang=1
***
SS/SV/PD/SE