பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படைக் கப்பல் சுனைனா கொச்சி திரும்பியது: பன்னாட்டு கடல்சார் கூட்டுப் பயணம் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 6:21PM by PIB Chennai

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பன்னாட்டு கூட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா கொச்சி துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்தது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியக் கடற்படைகளின் கூட்டுப் பாதுகாப்புப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் நடைபெற்றது.

இதில் பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 16 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 கடற்படை வீரர்கள் இந்தியக் கடற்படையுடன் இணைந்து பங்கேற்றனர். ‘ஒரே பெருங்கடல், ஒரே இலக்கு’ என்ற நோக்கோடும், பிரதமரின் ‘பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ என்ற தொலைநோக்கு பார்வையின்படியும் இப்பயணம் அமைந்தது.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி புறப்பட்ட இக்கப்பல் மாலே, புக்கெட், ஜகார்த்தா, சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்களுக்குச் சென்று கூட்டுப் பயிற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு விவாதங்களை மேற்கொண்டது. கொச்சி திரும்பிய கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா பன்னாட்டு வீரர்களின் கூட்டு உழைப்பைப் பாராட்டி வரவேற்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263352&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2263352

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263489) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam