சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

79-வது உலக சுகாதார மாநாடு: தாய், சேய், குழந்தை நலனுக்கான கூட்டாண்மை வாரியத் தலைவருடன், மத்திய சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 3:23PM by PIB Chennai

ஜெனீவாவில் இன்று  (20.05.2026) நடைபெற்ற 79-வது உலக சுகாதார மாநாட்டிற்கு  இடையேமத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டாதாய்சேய் மற்றும் குழந்தை நலனுக்கான கூட்டாண்மை வாரியத் தலைவர் திருமிகு ஹெலன் கிளார்க்குடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போதுபெண்கள்குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்திற்கு உலகளாவிய செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை மத்திய சுகாதார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 2005-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தாய்சேய் மற்றும் குழந்தை நலனுக்கான கூட்டாண்மை வாரியத்துடன் இந்தியாவுக்கு உள்ள நீண்டகாலத் தொடர்பை எடுத்துரைத்த அமைச்சர்அந்த அமைப்புடனான தனது நட்புறவை தொடர்வதிலும் அதன் நோக்கங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்றார்.

வாரியத்தின் துணைத் தலைவராகவும்நிலைக் குழுவின் தலைவராகவும் தாய்சேய் மற்றும் குழந்தை நலனுக்கான கூட்டாண்மையில் இந்தியாவின் செயல்திறன் மிக்க தலைமைப் பங்கினை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் சார்பில் ஆண்டுதோறும் காலவரம்பின்றி வழங்கப்படும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மானியப் பங்களிப்பு தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும்அது விரைவில் பகிரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்சேய் மற்றும் குழந்தை நலனுக்கான கூட்டாண்மையின் துணைத் தலைவராக இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர்பெண்கள்குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஆரோக்கியம்அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் சுமை உள்ளிட்டவற்றில் அந்த அமைப்புக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். பரந்த நன்மைக்காக உலக அளவில் பகிர்வதற்குக் கணிசமான தொழில்நுட்ப வளங்களையும் டிஜிட்டல் பொது சுகாதாரப் பொருட்களையும் இந்தியா உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான தலைமைத்துவத்தையும் பங்களிப்புகளையும் திருமிகு ஹெலன் கிளார்க் பாராட்டினார். தாய்சேய் மற்றும் குழந்தை நலனுக்கான கூட்டாண்மை மற்றும் விரிவான உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பிலும் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கினையும் அவர் அங்கீகரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263212&reg=3&lang=1

 

***

SS/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263406) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam