நித்தி ஆயோக்
ஜம்மு காஷ்மீரில் 500 புதிய அடல் சிந்தனை ஆய்வகங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களை அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம் வரவேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 3:41PM by PIB Chennai
நாட்டின் எல்லைப்பகுதிகளில் வலுவான புதுமைக்கண்டுபிடிப்பு சூழலை கட்டமைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக நித்தி ஆயோக்கின் அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம், ஜம்மு காஷ்மீர் அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 500 புதிய அடல் சிந்தனை ஆய்வகங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களை இன்று (20.05.2026) முதல் வரவேற்கிறது.
இந்த 500 புதிய அடல் சிந்தனை ஆய்வகங்கள், அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கத்தின் எல்லைப்பகுதித் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் இத்திட்டம் ஜம்மு காஷ்மீரின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதுமை கண்டுபிடிப்பு வாய்ப்புகளுக்கான சமமான அணுகலை உறுதி செய்கிறது.
மேலும் இந்தத் தொலைநோக்கு முயற்சி, பள்ளி மாணவர்களிடையே குறிப்பாக, தொலைதூர எல்லைப்புற மலைப்பிரதேச மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களிடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு சிந்தனை, சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான கல்வி அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் ஜம்மு காஷ்மீரை எல்லைப்பகுதி கண்டுபிடிப்புகளுக்கான முன்னணி மாதிரியாக திகழச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263225®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263393)
வருகையாளர் எண்ணிக்கை : 7