பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொரியக் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அன் கியூ பேக் உடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சியோலில் இன்று இருதரப்பு பேச்சு நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 5:16PM by PIB Chennai

சியோலில் கொரியக் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அன் கியூ பேக் உடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (20.05.2026) இருதரப்பு பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ததுடன், தொழில்துறை, உற்பத்தி, கடல்சார் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ராணுவப் பரிமாற்றங்கள், பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான  வழிவகைகள் குறித்து விவாதித்தனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவின் தேசிய ராணுவக் கல்லூரி, கொரியா தேசிய ராணுவப் பல்கலைக்கழம் இடையேயான பயிற்சி மற்றும் ஐநா அமைதிப் படை ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பின்னர் திரு ராஜ்நாத் சிங், இந்தியா – தென்கொரியா பாதுகாப்பு தொழில்துறை வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள், முன்னணி பாதுகாப்புத் தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, கூட்டு மேம்பாடு உள்ளிட்டவற்றில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான தளமாக இந்த சந்திப்பு அமைந்தது.

வர்த்தகத் தலைவர்களிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தளவாட தொழில்துறை சூழலையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதே நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளின் அடிப்படையில் உள்ள வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263304&reg=3&lang=1

 

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263386) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam