பிரதமர் அலுவலகம்
சிறந்த நெறிமுறைகள், மனித நடத்தையை அவசியம் வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 10:24AM by PIB Chennai
நேர்மையான நடத்தை என்பது தனிநபருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது என்று குறிப்பிடும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தக் கொள்கையைப் பின்பற்றி நமது நாட்டு மக்கள் முழு நிதானம், திறன் மற்றும் கடமை உணர்வுடன் நாட்டைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திரு மோடி எடுத்துரைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதற்கான தீர்மானம் புறக்கருத்து அல்லது தற்காலிக உந்துதலின் அடிப்படையில் அமையாமல், நடத்தைக்கு வழிகாட்டுதலையும் ஒழுக்கத்தையும் அளிக்கும் சாஸ்திரத்தில் ஒருங்கிணைந்த சிறந்த நெறிமுறைகளின் தரத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். எனவே, ஒருவர் அவ்வாறு நிறுவப்பட்ட தரங்களின் அமைப்புக்கேற்ப செயல்பட வேண்டும். அதனால் ஒருவரின் நடத்தை சமநிலையானதாகவும் மதிப்புடையதாகவும் அர்த்தமுடையதாகவும் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263079®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263130)
வருகையாளர் எண்ணிக்கை : 5