ஜல்சக்தி அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தில் அணை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 7:57PM by PIB Chennai
பொதுமக்கள் விழிப்புணர்வு, பேரிடர் ஆயத்தம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் இமாச்சலப் பிரதேசத்தின் நாத்பா ஜாக்ரி நீர்மின் திட்டப் பகுதியில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சியில் பேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திரு. சௌரப் அகர்வால், பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் விழிப்புணர்வுடன் கூடிய சமூகங்களின் பங்கு முக்கியமானது என்றார். கின்னௌர் மாவட்டத் துணை ஆணையர் மருத்துவர் அமித் குமார் சர்மா மற்றும் திட்டத் தலைவர் திரு. ராஜீவ் கபூர் ஆகியோர் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், அணை பாதுகாப்புச் சட்டம் 2021-ன் விதிகள் குறித்து ஆணையத்தின் துணை இயக்குநர் திரு. முகமது ஜிஷான் விளக்கினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் அணையின் கீழ்மட்டப் பகுதியைச் சேர்ந்த 8 கிராமங்களின் பொதுமக்கள் என 250-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். அணை மேலாண்மையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் குறித்து தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தெருக்கூத்து ஆகியவற்றுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262981®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2262981
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263060)
வருகையாளர் எண்ணிக்கை : 10