சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜெனீவாவில் நடைபெற்ற 79-வது உலக சுகாதார மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 7:47PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று நடைபெற்ற 79-வது உலக சுகாதார மாநாட்டின் முழு அமர்வில் உரையாற்றினார். அப்போது, “அனைவருக்கும் சுகாதாரம்” என்ற வழிகாட்டும் கொள்கையின் கீழ், சமமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் சார்ந்த சுகாதாரப் பராமரிப்பிற்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“உலகளாவிய சுகாதாரத்தை மறுவடிவமைத்தல்: ஒரு பகிரப்பட்ட பொறுப்பு” என்ற கருப்பொருளில் மாநாட்டில் உரையாற்றிய திரு. நட்டா, சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் விரிவான அணுகுமுறையை விளக்கினார். “‘அரசு முழுமை’ மற்றும் ‘சமூகம் முழுமை’ என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம், இந்தியா உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.
மலிவு விலையில் மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை மத்திய சுகாதார அமைச்சர் எடுத்துரைத்தார். சமூகங்களுக்கு அருகாமையில் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, இந்தியா முழுவதும் 1,85,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களை நிறுவியுள்ளதாக அவர் மாநாட்டில் தெரிவித்தார்.
பெருந்தொற்றுத் தயார்நிலை மற்றும் மீள்திறன் கொண்ட பொது சுகாதார அமைப்புகள் குறித்த இந்தியாவின் முயற்சிகளை வலியுறுத்திய திரு. நட்டா, எதிர்கால பொது சுகாதார சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதற்காக, அரசு சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் அவசரகால தயார் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் lகாணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262974®=3&ang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263059)
வருகையாளர் எண்ணிக்கை : 10