விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவனேஸ்வரில் கிழக்கு பிராந்திய கார் பருவ வேளாண் மாநாடு

மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 7:48PM by PIB Chennai

ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய கிழக்கு மாநிலங்களுக்கான கார் பருவ' வேளாண் மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த 6 அம்ச உத்திகள் பின்பற்றப்படுகின்றன. நெல், கோதுமையில் இந்தியா வலுவாக இருந்தாலும், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் சுயசார்பு அடைய வேண்டியுள்ளது. மண் வளத்தைக் காக்கவும், சிறு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் பயிர் சாகுபடியுடன் தோட்டம், கால்நடை, மீன்வளர்ப்பை இணைக்கும் ஒருங்கிணைந்த விவசாய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

மேலும், ஜூன் 1 முதல் 15 வரை நாடு தழுவிய அளவில் 'நிலம் காப்போம் இயக்கம்' தொடங்கப்பட்டு சீரான உரப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் 'விவசாயி அடையாள அட்டை' மூலம் திட்டப்பலன்கள் நேரடியாகச் சென்றடையும். போலி பூச்சிக்கொல்லி மற்றும் தரமற்ற உர விற்பனையைத் தடுக்க புதிய பூச்சிக்கொல்லி மற்றும் விதைச் சட்டங்களைக் கொண்டுவர அரசு தயாராகி வருகிறது என்றும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262972&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2262972

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263057) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia