சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
"சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது" :மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 6:19PM by PIB Chennai
மத்திய அரசின் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மாநில சிறுபான்மையினர் ஆணையங்களின் மாநாட்டை புது தில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடத்தியது.
சிறுபான்மையினரின் நலன், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் முக்கியப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டிற்கு மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு மற்றும் மத்திய சிறுபான்மையினர் விவகார இணை அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு. பெர்ஜிஸ் தேசாய், செல்வி எஸ். முனாவரி பேகம், ஆணையத்தின் செயலாளர் திருமதி. அல்கா உபாத்யாயா மற்றும் மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, "இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்துச் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பும் அளப்பரியது. தொழில் துறையில் பார்சி சமூகத்தினரும், கல்வி மற்றும் மருத்துவத்தில் கிறித்தவர்களும், இந்தியாவின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்கி வருகிறது. அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் வாழ்வாதாரச் சவால்களை எதிர்கொண்டு, தஞ்சமடைய இந்தியாவையே நாடுகின்றனர். ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை இப்பிராந்தியத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியாவைப் புகலிடமாகவும், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான இடமாகவும் பார்க்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262912®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2262912
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263051)
வருகையாளர் எண்ணிக்கை : 12