தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் மே மாதத்திற்கான இணைய வழி குறுகிய கால பயிற்சித் திட்டம் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 6:11PM by PIB Chennai
இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் மே மாதத்திற்கான இணைய வழி குறுகிய கால பயிற்சித் திட்டம் தொடங்கியது
இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வார இணைய வழி குறுகிய கால பயிற்சித் திட்டத்தை ஆணையத்தின் தலைவர், நீதிபதி திரு. வி. ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் திரு. பாரத் லால், இணைச் செயலாளர் திருமதி. சைடிங்புயி சாக்சுவாக், இயக்குனர் திரு. இர்ஷாத் ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதிலுமிருந்து 1,417 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
தொடக்க உரையாற்றிய நீதிபதி திரு. ராமசுப்பிரமணியன், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் தற்போது அதிகப்படியான ஆயுத மோதல்களைச் சந்தித்து வருகிறது. உலகளவில் 12.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். தொழில்நுட்பம் வாய்ப்புகளை உருவாக்கினாலும், சில நேரங்களில் வன்முறைக்கும் வழிவகுக்கிறது" என்று குறிப்பிட்டார். மேலும், சமூகத்தின் மீது இரக்கத்துடனும், மனித உரிமைப் பிரச்சினைகளில் விழிப்புணர்வுடனும் செயல்பட மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.
பொதுச்செயலாளர் திரு. பாரத் லால் பேசுகையில், "மாணவர்கள் சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பு விழுமியங்களை உள்வாங்க வேண்டும்" என்றார். இப் பயிற்சித் திட்டத்தில் 45 அமர்வுகள் இடம்பெறும்; 40 சிறந்த வல்லுநர்கள் உரையாற்றுவர். அத்துடன் காவல் நிலையம், திகார் சிறை போன்ற இடங்களுக்கு இணையவழியாக அழைத்துச் செல்லப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262908®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2262908
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263043)
வருகையாளர் எண்ணிக்கை : 11