ஜல்சக்தி அமைச்சகம்
வடகிழக்குப் பிராந்திய நீ்ர் மற்றும் நில மேலாண்மை நிறுவனத்தின் 6-வது நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 5:31PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள வடகிழக்குப் பிராந்திய நீ்ர் மற்றும் நில மேலாண்மை நிறுவனத்தின் 6-வது நிர்வாகக்குழுக் கூட்டம் குவஹாத்தியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு முன்பாக இந்நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைத்தார். வடகிழக்குப் பிராந்தியத்தில் நீர் மற்றும் நில மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்திகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
2024-25-ம் நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. நடப்பாண்டில் இந்நிறுவனம் 2800-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயன் பெறும் வகையில் 71 பயிற்சித் திட்டங்களை நடத்தியுள்ளது. நீர்வள மேலாண்மையில் சிறப்புமிக்க எம்.டெக். மற்றும் பிஎச்.டி படிப்புத் திட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262869®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262954)
வருகையாளர் எண்ணிக்கை : 12