இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேசம் இந்தூரில் பிரிக்ஸ் இளையோர் தொழில்முனைவு பணிக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 5:01PM by PIB Chennai

இந்தியாவின் 2026 பிரிக்ஸ் உச்சிமாநாடு தலைமைத்துவத்தின் கீழ், மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளையோர் நலத்துறை 2026 மே 20, 21 ஆகிய நாட்களில் பிரிக்ஸ் இளையோர் தொழில்முனைவு பணிக்குழுக்கூட்டத்தை இந்தூரில் நடத்த உள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இளையோர் தொழில் முனைவோர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். புதுமை கண்டுபிடிப்பு, தொழில்துறை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியமானவர்களாக இளையோரை இந்தியா தொடர்ந்து கருதுவதை  இது பிரதிபலிக்கிறது.

இந்த இரண்டு நாள் கூட்டத்தில் மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262835&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262951) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati