பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 19 MAY 2026 1:31PM by PIB Chennai

உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் கந்தூரி, ஆயுதப்படை முதல் அரசியல் வரை ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமது முதலமைச்சர் பதவிக் காலத்தில் உத்தராகண்ட் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு குறித்து சுட்டிக்காட்டிய திரு மோடி, மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய விதம் உண்மையில் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார்.  நாடு முழுவதும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய  அயராத பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்தத் துயரமான தருணத்தில் மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262701&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2262807) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam