வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"நாகாலாந்தின் காபிகள்" திட்டம் - மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 6:35PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, இன்று (18.05.2026) நாகாலாந்திற்கான தொகுப்பு அடிப்படையிலான காபி மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு சுகந்தா மஜும்தார், நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ, நாகாலாந்து துணை முதலமைச்சர் திரு டி.ஆர். ஜெலியாங், உள்ளிட்டோர் முன்னிலையில் இந்தத் தொடக்க விழா நடைபெற்றது.

 

₹175 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும், “நாகாலாந்தின் காபி” திட்டமானது, அரசின் முழுமையான அணுகுமுறையின் மூலம் வடிவமைக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் கண்ணோட்டங்களையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், திட்டச் செயல்பாடுகள் கள யதார்த்தங்களையும் விவசாய சமூகங்களின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பதை இது உறுதி செய்கிறது.

 

இந்தத் திட்டம், நாகாலாந்தில் இரண்டு முன்னோடி காபித் தொகுப்புப் பகுதிகளை அடையாளம் கண்டு, தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாளும். இந்த முயற்சி, தோட்ட மேம்பாடு, அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல், வர்த்தக ரீதியில் முத்திரைப்படுத்துதல், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, சுற்றுலா, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், காபி மதிப்புச் சங்கிலியில் உள்ள முக்கிய இடைவெளிகளைக் களைய முற்படுகிறது.

 

முழு வேளாண் மதிப்புச் சங்கிலியிலும் விவசாயிகள் உண்மையான பயனாளிகளாக மாறுவதை உறுதி செய்வதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எடுத்துரைத்தார்.

 

இது வெறும் அரசு அணுகுமுறை மட்டுமல்ல எனவும், அமைச்சகங்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், பதப்படுத்துபவர்கள், வர்த்தக முத்திரை நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், சந்தைத் தலைவர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் அணுகுமுறையாகும் எனவும் அவர் கூறினார்.

 

நாகாலாந்தை, வலுவான உள்நாட்டு, சர்வதேச காபிப் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழு மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு முயற்சியாக 'நாகாலாந்தின் காபிகள்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இந்தத் தொடக்க விழாவில், நாகாலாந்து மாநில அரசு அதிகாரிகளுடன், விவசாயிகள், தொழில்முனைவோர், பிற பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262447&reg=3&lang=1

 

(Release ID : 2262447)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2262499) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी