பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சதீசனுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 18 MAY 2026 1:49PM by PIB Chennai

கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறக்க எனது நல்வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள அரசுக்கு, மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என உறுதியளிக்கிறேன்"

***

(Release ID : 2262215)

SS/PLM/KR


(रिलीज़ आईडी: 2262247) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam