பாதுகாப்பு அமைச்சகம்
போபாலில் பாய்மரப் படகு முனையத்தைத் திறந்தது கடற்படை கடற்படை
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAY 2026 6:15PM by PIB Chennai
இந்தியக் கடற்படை, போபாலில் உள்ள போஜ்தால் எனப் பரவலாக அறியப்படும் அப்பர் லேக்கில், தனது கடற்படை பாய்மர முனையத்தை இன்று (17 மே 2026) திறந்தது.
பாதுகாப்புப் படை அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள், என்சிசி மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் , கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி தொடக்க விழாவிற்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை நீர் விளையாட்டுப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இணைந்து ஒரு கண்கவர் பாய்மர அணிவகுப்பை நடத்தினர். மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கயாக்கிங், கேனோயிங் போன்ற நீர் விளையாட்டுகள் இடம்பெற்றன.
கடற்படை வீரர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீர்ச்சறுக்கு பயிற்சி எப்போதுமே இருந்து வருகிறது. இது அவர்களின் செயல்பாட்டுத் தளத்தில் தோழமையையும் போட்டி மனப்பான்மையையும் தீவிரமாக வளர்க்கிறது.
ஒரு அதிநவீன வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாய்மரப் படகுப் பயிற்சி மையம், இந்தியக் கடற்படை பாய்மரப் படகு அணி, கடற்படை படகோட்டம், கானோயிங் - கயாக்கிங் அணிகள், அத்துடன் தேசிய மாணவர் படை ஆகியவற்றின் பயிற்சிக்காக விரிவாகப் பயன்படுத்தப்படும். தற்போது, கடற்படை பாய்மரப் படகு அணியில் உள்ள 34 வீரர்களில் 17 பேர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மையமானது, மத்தியப் பிரதேச இளைஞர்களை நீர் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாதுகாப்புப் படைகளில் சேரத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த முன்முயற்சி, ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுத் வீரர்களை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் ஒரு படியாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262037®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2262053)
வருகையாளர் எண்ணிக்கை : 13