அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2026 4:11PM by PIB Chennai
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி, ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம், வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கவும் பல புதுமையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) நிதித் திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. “இந்தியாவில் குவாண்டம்-பாதுகாப்பான சூழல் அமைப்பு” என்ற அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை நிதி மேலாளராக செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நிலை அறிக்கை குறித்த ஒரு தொகுப்பும் வெளியிடப்பட்டது. இந்தத் தொகுப்பு, பெறப்பட்ட திட்ட முன்மொழிவுகள், துறைவாரியான பங்கீடு, திட்ட மதிப்பீடு, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள், பல்வேறு முக்கியத் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அதிநவீன உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கு வாரியம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் உள்ளிட்ட அம்சங்களை முன்வைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261737®=3&lang=1
(Release ID : 2261737)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261779)
வருகையாளர் எண்ணிக்கை : 12