வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
சிக்கிம் பயணத்தின் போது மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா முக்கிய வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
15 MAY 2026 7:40PM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, சிக்கிமுக்கான தனது பயணத்தின் இரண்டாம் நாளில், நாம்ச்சி முழுவதும் தொடர் சந்திப்புகளை மேற்கொண்டார். அப்போது, கல்வி, சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய முன்முயற்சிகளை அவர் ஆய்வு செய்தார்.
சிக்கிமில் உருவாக்கப்படும் முதல் மாநிலப் பல்கலைக்கழகமான, காஞ்சன்ஜங்கா சிக்கிம் மாநிலப் பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சர் சிந்தியா பார்வையிட்டார். 28 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்திற்கு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள வடகிழக்கு கவுன்சில் ₹9.61 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், அமைச்சர் திரு சிந்தியா நாம்ச்சியில் உள்ள டெமி தேயிலைத் தோட்டம் மற்றும் டெமி தேயிலை பதப்படுத்தும் பிரிவுக்குச் சென்று, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, செம்சேயில் உள்ள இந்திய இமயமலை சாகச மற்றும் பசுமை சுற்றுலா மையத்திற்குச் (IHCAE) சென்ற அமைச்சர், தமது அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டு வரும், முன்மொழியப்பட்ட நாம்ச்சி–டெமி–ராவங்லா சுற்றுலாப்பாதையை ஆய்வு செய்தார். நாம்ச்சியில் உள்ள பைச்சுங் மைதானத்தில் நடைபெற்ற 4வது சிக்கிம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261566®=3&lang=2
(Release ID: 2261566)
***
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2261681)
आगंतुक पटल : 39