கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார அமைச்சகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து ஆச்சார்ய ஸ்ரீ தினேஷ் சந்திர ஜோஷியின் நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கருத்தரங்கை நடத்தின
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 6:20PM by PIB Chennai
சாகித்ய அகாடமி, ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், இன்று புதுதில்லியில் உள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில், ஆச்சார்ய ஸ்ரீ தினேஷ் சந்திர ஜோஷியின் நூற்றாண்டு விழா மற்றும் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சாரத் துறையில் அவரது பங்களிப்புகள் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தின.
துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சமர் நந்தா, இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் மீது ஆச்சார்ய தினேஷ் சந்திர ஜோஷி கொண்டிருந்த ஆழ்ந்த பற்றை நினைவு கூர்ந்ததுடன், சமஸ்கிருத மொழி, குருகுல முறை மற்றும் சனாதனப் பண்பாட்டின் அடித்தளங்களைப் பலவீனப்படுத்த முயன்ற உளவியல் மற்றும் பண்பாட்டுத் தாக்குதலை ஆச்சார்யர் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சமஸ்கிருதப் புலமைக்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் ஆச்சார்ய ஸ்ரீ தினேஷ் சந்திர ஜோஷி ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், சிறப்பு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261513®=3&lang=1
(Release ID: 2261513)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261655)
வருகையாளர் எண்ணிக்கை : 5