புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிநவீன தொழில் ஆலோசனை மையத்தைத் திறந்து வைத்து, பருவநிலை தொழில்முனைவில் புரட்சியை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வைஸ்-2026’ மாநாட்டை புனே ஐஐடிஎம் நடத்தியது

प्रविष्टि तिथि: 15 MAY 2026 5:21PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்  கீழ் இயங்கும் புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்), வானிலை மற்றும் பருவநிலைத் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான தனிச் சிறப்பு ஆலோசனை மையத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தது. இந்த முக்கிய நிகழ்வானது, ‘புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான வானிலை மற்றும் பருவநிலை புத்தாக்க மாநாடு (வைஸ்-2026)’ என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசிய மாநாட்டோடு இணைந்து நடைபெற்றது. இது இந்தியாவின் வானிலை சேவைகளில் தனியார் துறை ஒருங்கிணைப்பின் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது.

மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று இந்த மையத்தை திறந்து வைத்தார். பருவநிலை சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியப் பங்கினை எடுத்துரைத்த அவர்,  பருவநிலை மாற்றத்தால் தீவிரமடைந்துள்ள நவீன வானிலை முறைகளின் சிக்கலானது, பாரம்பரிய ஆராய்ச்சியில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய, பலதரப்பட்ட பங்குதாரர்களைக் கொண்ட ஒரு சூழலமைப்பிற்கு மாற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்றார். புதிதாகத் தொடங்கப்பட்ட 'மிஷன் மௌசம்' திட்டம் என்பது, மேம்பட்ட கண்காணிப்புகள், செயற்கை நுண்ணறிவு வழி மாதிரியாக்கம், உயிர்களைப் பாதுகாப்பதற்காக உள்ளூர் அளவில் தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "வானிலைக்குத் தயாரான, பருவநிலை சார்ந்த அறிவார்ந்த தேசத்தை" உருவாக்குவதற்கான ஓர் அடித்தளம்  என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

வைஸ் 2026 தொடக்க விழா மற்றும் ஸ்டார்ட்அப் திட்டம் என்பது, பருவநிலை-தொழில்நுட்ப சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றுகூடலைக் கண்டது; இதன் தொடக்க விழாவில் மொத்தம் 400 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், அறிவியல் தரவுகளை நடைமுறை சார்ந்த, நிகழ் உலகத் தாக்கமாக மாற்றுவதில் கவனம் செலுத்தும் 100 பங்கேற்பாளர்களும் (ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆர்வமுள்ள நிறுவனர்கள்) பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261458&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2261653) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi