சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி-என்.சி.ஆர் காற்று மாசைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகள்: 28-வது உயர்நிலைக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 4:55PM by PIB Chennai

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் காற்று மாசுப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது குறித்த 28-வது உயர்நிலைக் குழு கூட்டம் ராஜேஷ் வர்மா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாகனப் புகையைக் குறைக்க, தில்லியில் ஜனவரி 2027 முதல் மற்றும் குருகிராம், நொய்டா போன்ற பகுதிகளில் 2028 முதல் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 1, 2026 முதல் செல்லுபடியாகும் புகை வெளியீடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கப்படும் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டது. விவசாயக் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்ட 6 அனல் மின் நிலையங்களுக்கு ரூ.61.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. காற்றுத் தரத்தைக் கண்காணிக்கக் கூடுதலாக 46 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. வனப் பரப்பை அதிகரிக்க 2026-27 ஆம் ஆண்டில் சுமார் 4.60 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காற்று மாசைக் குறைக்க அனைத்து முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261439&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2261439

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261613) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी