2026, ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்குகள் மற்றும் சேவைகள்) 80.80 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2025 உடன் ஒப்பிடுகையில் 13.59 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2026, ஏப்ரல் மாதத்திற்கான மொத்த இறக்குமதி (சரக்குகள் மற்றும் சேவைகள்) 88.61 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2025 உடன் ஒப்பிடுகையில் 7.67 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2026, ஏப்ரல் மாதத்திற்கான சரக்குகள் ஏற்றுமதி 43.56 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது ஏப்ரல் 2025-ல் 38.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2026, ஏப்ரல் மாதத்திற்கான சரக்குகள் இறக்குமதி 71.94 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது ஏப்ரல் 2025-ல் 65.38 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பெட்ரோலியம், மணிக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அல்லாத ஏற்றுமதி, ஏப்ரல் 2025-ல் 28.66 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026-ல் 31.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பெட்ரோலியம், மணிக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அல்லாத இறக்குமதி, ஏப்ரல் 2025-ல் 39.75 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026-ல் 45.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
ஏப்ரல் 2025-ல் 32.85 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சேவை ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026-ல் 37.24 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2025-ல் 16.91 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சேவைகள் இறக்குமதி மதிப்புடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026-ல் 16.66 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261383®=3&lang=1
****
SS/SMB/SH