ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சத்தீஷ்கரில் நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களை நிலவளத்துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
15 MAY 2026 1:07PM by PIB Chennai
மத்திய அரசின் நிலவளத்துறைச் செயலாளர் திரு நரேந்திர பூஷன் சத்தீஷ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார். பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்வள மேம்பாட்டுப் பணிகளை நேற்று (14.05.2026) அவர் ஆய்வு செய்தார்.
நீர்ப்பாசனம், நிலவளம், நீர் பாதுகாப்பு, ஆகியவை தொடர்பான பணிகளையும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா, எலுமிச்சை ஆகியவற்றுக்குத்தேவையான நீர்ப்பாசனம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தோட்டக்கலைப் பணிகள், நீர்சிக்கனம் ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மத்திய நிலவளத்துறைச் செயலாளர் தலைமையிலான குழு பாராட்டுத் தெரிவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261323®=3&lang=1
***
SS/PLM/KPG/EA
(रिलीज़ आईडी: 2261432)
आगंतुक पटल : 46