ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய ஜவுளி அமைச்சகம், இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக் கழகம், இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
प्रविष्टि तिथि:
14 MAY 2026 9:08PM by PIB Chennai
புதுதில்லி, நேதாஜி நகர், ஜிபிஓஏ3-ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கையெழுத்தாகிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநரான திரு. அகிலேஷ் குமார், இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகியான டாக்டர் சேகர் ஐயர் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பகுப்பாய்வு ரீதியாக வலுவான ஜவுளித் துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதில், மத்திய அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. நாட்டின் உற்பத்தி வெளியீடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில், கொள்கை உருவாக்கத்திற்கான ஆராய்ச்சி, ஜவுளித் தரவுகளை வலுப்படுத்துதல் மற்றும் தரவு சார்ந்த பகுப்பாய்வுகளை வழங்குவதற்கு, ந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக் கழகத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261227®=3&lang=2
***
TV/SV/EA
(रिलीज़ आईडी: 2261376)
आगंतुक पटल : 50