வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஆப்பிரிக்கா வணிகக் கலந்துரையாடல்: புததில்லியில் முன்னோட்ட நிகழ்வு!

प्रविष्टि तिथि: 14 MAY 2026 8:26PM by PIB Chennai

இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற 4-வது உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள 'இந்தியா-ஆப்பிரிக்கா வணிகக் கலந்துரையாடல் மற்றும் கண்காட்சி'க்கான முன்னோட்ட நிகழ்வு, புதுதில்லி பாரத மண்டபத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல், "கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 14.39% வளர்ச்சியடைந்து, 93.69 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் சுதந்திர வர்த்தகப் பகுதியும்  இந்தியாவின் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமும் இணைந்து 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன" என்றார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கூட்டாட்சியை வலுப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

மத்திய வர்த்தகச் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் பேசுகையில், வரவிருக்கும் இந்த வணிகக் கலந்துரையாடல் காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, சுகாதாரம் மற்றும் முக்கியமான தாதுக்கள் உள்ளிட்ட கருப்பொருள்களில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார். இது 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' மற்றும் 'ஆப்பிரிக்கா நிகழ்ச்சி நிரல் 2063' ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும் என உறுதியளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261202&reg=3&lang=2

***

TV/VK/EA


(रिलीज़ आईडी: 2261373) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu