மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வள ஏற்றுமதி மேம்பாடு: மத்திய அமைச்சர்கள் திரு.பியூஷ் கோயல், திரு.ராஜீவ் ரஞ்சன் சிங் கூட்டு ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 7:30PM by PIB Chennai

இந்திய மீன்வள ஏற்றுமதியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், 2025-26 நிதியாண்டில் இந்திய கடல் உணவு ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக ரூ.72,325.82 கோடியை (8.28 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளதற்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன்பிடி உள்கட்டமைப்பை விரைவுபடுத்தவும், பிராண்டிங் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தினார்.

 

அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், "பின்தங்கிய உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பதப்படுத்தும் ஆலையாவது அமைக்கப்பட வேண்டும். அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள 'சூரை'  போன்ற அதிக மதிப்புமிக்க மீன்களின் ஏற்றுமதி திறனைப் பயன்படுத்த கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைப்புகள் அங்கு தங்களின் இருப்பை விரிவாக்க வேண்டும்" என்றார்.

 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, சர்வதேச சந்தை தரநிலைகளுக்கு ஏற்ப கடல் உணவுகளின் தரத்தைக் கண்காணிப்பது அவசியம் என்றும், இதற்காக 34 மீன் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொகுப்புகளை  அரசு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இக்கூட்டம் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை நோக்கிய ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261172&reg=3&lang=2

 

செய்தி அடையாள எண்: 2261172

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261259) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी