மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தலைமையில் ஐஐஎம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 5:08PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சரின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை, ஐஐஎம் அகமதாபாத் வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (ஐஐஎம்) ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சரும், இக்குழுவின் தலைவருமான திரு. தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். இதில் ஐஐஎம் நிர்வாகக் குழுத் தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், "வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை அடைவதில் ஐஐஎம்-களின் பங்கு, மாணவர் நலன், கல்வித் தரம், உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஐஐஎம் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கான வலுவான வினையூக்கிகளாக உருவெடுத்துள்ளன" என்றார்.
மேலும், இளநிலை பட்டப் படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வுகளை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுதல், எம்பிஏ சேர்க்கை, மாணவர் இடமாற்றம் மற்றும் கட்டணத் திரும்பப் பெறுதல் கொள்கைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல், இளம் பேராசிரியர்களுக்கான பணிப் பகிர்வுக் கொள்கை மற்றும் ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பட்டியலைச் செயல்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261046®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2261046
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261246)
வருகையாளர் எண்ணிக்கை : 9