வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்கிரீட் தரம் குறித்த தேசியப் பயிலரங்கம்: புதுதில்லியில் என்.சி.பி நடத்தியது

प्रविष्टि तिथि: 14 MAY 2026 4:50PM by PIB Chennai

தேசிய சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கவுன்சில் , புது தில்லியில் கடந்த மே 9 அன்று கான்கிரீட்டின் ஆயுள் வடிவமைப்பு மற்றும் தர உத்தரவாதம்" என்ற தலைப்பில் தேசியப் பயிலரங்கத்தை நடத்தியது. இதில் கட்டுமானத் துறை, கல்வி நிறுவனங்கள், மற்றும் இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) நிபுணர்கள் பங்கேற்று ஆலோசித்தனர்.

 

நிகழ்ச்சியை  சிஎஸ்ஐஆர்- சிபிஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் பிரதீப் குமார் ராமன்சர்லா தொடங்கி வைத்தார். இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் துணைப் பொது இயக்குநர் சஞ்சய் பந்த், என்சிபி தலைமை இயக்குர் டாக்டர் எல்.பி. சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப அமர்வுகளில் சென்னை ஐஐடி பேராசிரியர் மனு சந்தானம், மகேஷ் டாண்டன் உள்ளிட்ட வல்லுநர்கள் கான்கிரீட் ஆயுள் மற்றும் தரக்கட்டுப்பாடு குறித்துப் பேசினர்.

 

இவ்விழாவில், அரசுத் திட்டத்தின் கீழ் 'மேம்பட்ட கான்கிரீட் தொழில்நுட்பம்' (ஏசிடி) குறித்த 6 மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டது. இறுதியாக, "IS 456:2025-ஐச் செயல்படுத்த நாம் தயாராக உள்ளோமா?" என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. என்.சி.பி தலைவர் திரு. ஜி.ஜே. நாயுடு நன்றி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261032&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2261032

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2261241) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati