மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பொது அளவீடுகளுக்கான மேம்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 6:20PM by PIB Chennai

சர்வதேச தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் தர மேம்பாட்டில் நாட்டின் வளர்ந்து வரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு மதிப்புமிக்க பொறுப்பான, பொது அளவீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைப்பு பொறுப்பிற்கு இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தலைமைப் பொறுப்பில், ஏப்ரல் 2026 முதல் ஏப்ரல் 2028 வரை இந்தியா செயல்படும். ஜப்பானின் டோக்கியோவில் 2026 ஏப்ரல் 14 முதல் 16 வரை நடைபெற்ற பொது அளவீடுகள் அங்கீகார ஏற்பாட்டின் முதல் காலாண்டுக் கூட்டத்தின் போது, இந்தத் தலைமைப் பொறுப்பு உறுதி செய்யப்பட்டது.

பொது அளவீடுகள் அங்கீகார ஏற்பாடு என்பது, பரந்து விரிந்த தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் சான்றிதழ்களின் பரஸ்பர அங்கீகாரத்தை செயல்படுத்தும் ஒரு அடிப்படை சர்வதேச ஒப்பந்தமாகும். உயர்நிலைக் கொள்கைக் குழுக்களுக்கு அப்பால், உலகெங்கிலும் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கான "உண்மையின் ஒரே ஆதாரமாக" செயல்படும் பொது அளவீடுகளுக்கான   இணையதளத்தின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட பணிக்குழுக்கள் மற்றும் நிர்வாக நெறிமுறைகள் மூலம் இந்த வாரியம் செயல்படுகிறது.

பொது அளவீடுகள் மேம்பாட்டு வாரியம், பொது அளவீட்டு அங்கீகார ஏற்பாட்டு அமைப்பின் தொழில்நுட்ப மையமாகச் செயல்படுகிறது. இது பொது அளவீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான பொது வழிமுறை ஆகியவற்றிற்கான சர்வதேசப் பணித் திட்டத்தை நிர்வகிக்கிறது. இதர  பொது அளவீட்டு அங்கீகார ஏற்பாட்டு அமைப்புக் குழுக்கள், கொள்கை விஷயங்களைக் கையாளும் அதே வேளையில், உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களில் கவனம் செலுத்துகிறது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261117&reg=6&lang=1

(Release ID: 2261117)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261196) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam