பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புட்டபர்த்தியில் நடைபெறும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 5:07PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில், 2026-ம் ஆண்டு மே 15 அன்று நடைபெறும் பல்வேறு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில், 'விமானவியல் மேம்பாட்டு முகமை'யின் விமான ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையம்' அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. விமான ஒருங்கிணைப்பு, பரிசோதனை, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு ஆகிய பணிகளுக்கான இந்த மையம், 'மேம்பட்ட நடுத்தரப் போர் விமானம்' உற்பத்தித் திட்டத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவிடும்.

மேலும், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள டி. சிரசபள்ளி கிராமத்தில், 'பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் அதிநவீன 'கடற்படை அமைப்புகள் உற்பத்தி மையத்திற்கு' பாதுகாப்புத் துறை அமைச்சர் அடிக்கல் நாடுகிறார். நீருக்கடியில் செயல்படும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள் மற்றும் கடற்படைப் போர் அமைப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வளாகம் அமைக்கப்படவுள்ளது.

இதுதவிர, 'அக்னேயாஸ்திரா எனர்ஜெடிக்ஸ் லிமிடெட்' (கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம்) நிறுவனத்தின் 'பாதுகாப்பு எரிசக்தி மையம்', ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், மடகாசிராவில் உள்ள 'எச்எப்சிஎல் லிமிடெட்' நிறுவனத்தின் 'வெடிமருந்து மற்றும் மின்சார ஃபியூஸ் உற்பத்தி நிலையம்' மற்றும் கர்நூலில் அமையவுள்ள 'ட்ரோன் நகரம்' தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளன. மேலும், ஆந்திரப் பிரதேச மாநில அரசுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261042&reg=3&lang=1

 

 (Release ID: 2261042)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261160) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu