விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் விவசாயிகளின் நலன் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் பஞ்சாப் முதல்வர் திரு. பகவந்த் மான் இடையே ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 8:38PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் பஞ்சாப் முதல்வர் திரு.  பகவந்த் சிங் மான் இடையேயான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் பஞ்சாப் மாநிலத்தின் பங்களிப்பைப் பாராட்டிய மத்திய அமைச்சர், அம்மாநில விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தோளோடு தோள் நின்று செயல்படும் என்று உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் போது, பயிர் பல்வகைப்படுத்தல், நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மண்ணின் வளத்தை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலைத் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்த திரு. சௌஹான், உரங்களின் சமச்சீர் பயன்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நெல் அரவை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும், பருத்தி மற்றும் தோட்டக்கலை இயக்கங்களின் பலன்கள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இரு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்தன. மேலும், மத்திய விதைக் குழுவில் பஞ்சாப் மாநில பிரதிநிதியைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாப்பதோடு பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில் விவசாயத்தை மேம்படுத்தத் தெளிவான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260856&reg=6&lang=1

***

EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2261108) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati