தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தில் 13,426 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி வழங்கும் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

प्रविष्टि तिथि: 13 MAY 2026 7:36PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தில் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் டிஜிட்டல் பாரத் நிதி, ஆந்திர அரசு, ஏபிபிஐஎல், பிஎஸ்என்எல் மற்றும் ஏபிஎஸ்எஃப்எல் ஆகியவற்றுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லி சஞ்சார் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில், இத்திட்டத்திற்காக ரூ. 2,432 கோடி நிதி உதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் உள்ள 13,426 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட உள்ளன. இதில் ஏற்கனவே உள்ள 1,692 பஞ்சாயத்துகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதுடன், புதிதாக உருவாக்கப்பட்ட 480 பஞ்சாயத்துகளும் சேர்க்கப்படும். மேலும், தேவைக்கேற்ப 3,942 கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும். இத்திட்டம் சுமார் ஐந்து லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக ஃபைபர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் மூலம் மின்-ஆளுமை, தொலைதூரக் கல்வி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற சேவைகள் மாநிலத்தின் குக்கிராமங்களுக்கும் சென்றடையும். கிராமப்புற தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வளர்ச்சியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ‘டிஜிட்டல் பாரத் நிதி’ மூலம் பின்தங்கிய பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை கொண்டு செல்லும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260827&reg=3&lang=2

 

***

EA/SE


(रिलीज़ आईडी: 2261096) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी