நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இசிஎல் நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய நிலக்கரி இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 13 MAY 2026 8:12PM by PIB Chennai

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, 2026 மே 13 அன்று இசிஎல் நிறுவனத்தைப் பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள், முன்முயற்சிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை ஆய்வு செய்வது ஆகியவை இந்த வருகையின் நோக்கமாகும். உற்பத்தி, விநியோகம், சுரங்கப் பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் இசிஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையான வளர்ச்சிக்கான முன்முயற்சிகள் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார்.

இந்த வருகையின் ஒரு பகுதியாக, இசிஎல்-ன் குனுஸ்டோரியா இடத்திற்கு சென்ற அமைச்சரை இசிஎல் முதன்மை மேலாண்மை இயக்குநர் திரு சதீஷ் ஜா, இயக்குநர் (நிதி) திரு முகமது அன்சார் ஆலம், இயக்குநர் (மனிதவளம்) திரு குன்ஜன் குமார் சின்ஹா, இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு கிரிஷ் கோபிநாதன் நாயர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260848&reg=3&lang=2

***

SS/IR/RJ/EA


(रिलीज़ आईडी: 2260983) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali