மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் இந்திய மொழிகள் குறித்த கோடைகால முகாம் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 9:06PM by PIB Chennai

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்திய மொழிகள் குறித்த கோடைக்கால முகாமைத் தொடங்கி வைத்தார்.

 

தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் 2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியாவின் மொழிப் பன்மையை கொண்டாடுவதையும், பள்ளி மாணவர்களிடையே பன்மொழித் திறனை ஊக்குவிப்பதையும் இந்த நாடு தழுவிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் வளமான பன்மொழிப் பாரம்பரியம், "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழிப் பன்மை, அதன் மிகப்பெரிய கலாச்சார ஆற்றல்களில் ஒன்றாகும். மேலும் நாட்டில் 1,369 மொழிகளும்,  பேச்சு வழக்கு மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. மகிழ்ச்சியான, செயல்பாடு சார்ந்த மற்றும் அனுபவப்பூர்வமான கற்றல் மூலம் குழந்தைகள் பன்முகத்தன்மையை அனுபவிக்க உதவுவதை இந்திய மொழிகள் குறித்த கோடைகால முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சஞ்சய் குமார், குழந்தைகளிடையே அறிவாற்றல், தகவல் தொடர்பு மற்றும் அடிப்படைக் கற்றலை வலுப்படுத்துவதில் பன்மொழிப் பயன்பாட்டின் முக்கியப் பங்கை எடுத்துரைத்து, தேசியக் கல்விக் கொள்கை  2020-இன் மாற்றியமைக்கும் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தினார். பள்ளி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்கவும், பன்மொழிக் கற்றலை ஏற்றுக் கொள்ளவும், மேலும் தங்கள் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள தங்கள் சொல்லகராதியைத் தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ளவும் அவர் ஊக்குவித்தார். மொழி என்பது தகவல் தொடர்பின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களில் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், இலக்கியத்தை ஆராய்ந்து இந்திய மொழிகளின் செழுமையைப் போற்றுமாறும் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260867&reg=3&lang=2

 

(Release ID: 2260867)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260883) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English