அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள விஞ்ஞானிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 5:15PM by PIB Chennai
சிஎஸ்ஐஆர்-ல் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள விஞ்ஞானிகளுக்கான 10 நாள் அறிமுக சிஎஸ்ஐஆர் - மனித வள மேம்பாட்டு மையத்தில் 2026 மே 4 முதல் 13 வரை நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் 41 இளைய விஞ்ஞானிகள் இந்த அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் அவர்களுக்கு கற்றல், ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்முறை மேம்பாட்டுக்கான சிறந்த தரத்தை வழங்கியது. 2026 மே 4 அன்று தொடங்கிய அமர்வு புதுமை கண்டுபிடிப்பு, அறிவியல் கற்றல், நாட்டைக் கட்டமைத்தல் ஆகியவற்றைக் கொண்ட செழுமைமிக்க பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்றது.
சிஎஸ்ஐஆர்-ன் அறிவியல், நிர்வாகம் மற்றும் கூட்டு செயல் நடவடிக்கைக் குறித்த விரிவான புரிந்துணர்வை வழங்குவதோடு பயனுள்ள அறிவியல் தலைமைத்துவத்திற்கு அவசியமான தொழில்நுட்பத் திறன்களையும் தகுதிகளையும் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் வகையில் இந்த அறிமுகப் பயிற்சி திட்டம் நடைபெற்றது.
சிஎஸ்ஐஆர் மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தலைமை இயக்குநர்கள் வழங்கிய சொற்பொழிவுகள், நேரடி பயிற்சி அமர்வுகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் இளைய விஞ்ஞானிகள் பெரிதும் பயனடந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260725®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260823)
வருகையாளர் எண்ணிக்கை : 6